Friday, September 30, 2011

இதப்படிங்க மொதல்ல ..

இந்த ஊரு வர வர ரொம்ப மோசம் .. ஒரு நல்ல ஃபார்வர்ட் கூட வரமாட்டேன்குது. அட அதாவது பரவாலைங்க, எதாவது உருப்படியா பேசினாலாவது அந்த "கருவ" சுட்ரலாம்ன அது கூட நடக்க மாட்டேங்குது.. என்ன செய்ய, நம்ம தான் நாதாரி நம்ம கூட சுத்தறதும் அப்படி தான் இருக்கு .. எதாவது "கருவ " யோசிக்கலாம்ன இங்க அதுக்கான tonic உம் இல்ல




மொத கம்பனில தான் வேலையா வேலை கொடுத்து மனுசன ஏதும் எழுத விடாம பண்ணுனாங்க. இங்க சும்மாவே உட்காரவச்சு சாவடிகிரங்க. சரி எதபத்தியவது எழுதலாம்ன இங்க ஒட்டகத்த தவிர ஒண்ணுமே இல்ல. என்ன கொடும சார் இது? [ இதுல "நீ சம்பாரிக்கற , எதாவது பிளான் பண்ணுனு" கூட இருக்கற பெருசுக கொடச்சல் வேற. இச்ச்சே ..இந்த சின்ன வயசுல எவ்ளோ கஷ்டம்!! ]

எப்பவுமே சும்மவேதானே இருக்கோம், வெளில எங்காவது ட்ரிப் போலாம்ன அதுவும் வழக்கம் போல பிளான் லையே தான் போகுது. வந்த 1 . 3 years கிட்ட தட்ட எல்லா மாசமும் எதாவது பிளான் பண்ணுவோம், எப்பவும் போல எவனாவது சொதப்புவான். இப்படியே தாங்க போகுது என்னோட சவுதி வாழ்கை. இது போதாதுன்னு ரூம்ல இருக்கற பெருசுகளோட அன்பு தொல்லை. எனக்கே சங்கடம் வரும் " நம்ம நிசமா ஒரு engineer தானா இல்ல LKG பையனா" நு , அந்த அளவுக்கு பண்ணி விடுவாங்க.சத்தியமா சொல்றேங்க, சோறு ஊட்டி விடறது மட்டும் தாங்க இன்னும் பாக்கி. இதுகளை எல்லாம் யார் புள்ள குட்டிய விட்டு இங்க வர சொன்னது?

இத பத்தி பேசினா, " ஆமா .. நீ கார்ட்டூன் பாக்றே " ங்க . எங்க " பென் 10 , டோம் அண்ட் ஜெர்ரி " பாக்கறது கூடவா தப்பு ? இல்ல தெரியாம தான் கேட்குறேன், எப்போ பார்த்தாலும் சீரியலும், ரியாலிட்டி ஷோவ்ஸ் பாக்க முடியுமா? இல்ல 3 மணி நேரம் படம் பாக்க எந்த சாப்ட்வேர் engineer க்கு டைம் இருக்கு ? ( சத்தியமா சொல்றேங்க , நான் சாப்ட்வேர் engineer தான்.. நம்புங்க ப்ளீஸ் .. ). காமடி பாக்கலாம்ன போட்டதையே போட்டு போட்டு torture பண்றாங்க.. .. விடுங்க.. நம்ம பாயிண்ட் க்கு வருவோம்.

எதாவது உருப்படியா இங்க பண்ணனும் நா, என்ன பண்ணலாம்னு தான் யோசிக்கணும். so .. இவ்ளோ பிரச்சனைகள் இருக்கறதால எனக்கு blog க்கு தீம் யோசிச்சு ஏதும் எழுத முடியமாட்டேன்குது.. அதுவும் இன்னொரு பிரச்சன என்னன்னா தமிழ் டைப் பண்றது..நமக்கு தமிழ் பேசுறதுக்கே கஷ்டம். வர வர சுடரதுகும் ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது. அதான் வேட்டிய வரிஞ்சு கட்டிட்டு , sorry கைய மடிசுட்டு நம்ம "யாரடி நீ மோகினி" தனுஷ் மாதிரி code அடிக்கமா blog அடிக்கிறேன். சப்போர்ட் பண்ணுங்க.

கடைசியா நான் சொல்லவரது என்னன்னா, எதோ இனிமேலாவது நல்ல தீம் கிடைக்கலேன்னா நானே மொக்க போடுறேன் ..

beware ..



1 comment:

  1. Hey.. Tamil la super ah try pani eruka da...So funny...keep it up...

    ReplyDelete