Saturday, November 5, 2011

நான் விஜய் ரசிகன்







நான் விஜய் ரசிகன்!!!

என்ன சொல்றதுனே தெரியலைங்க..கொஞ்ச நாளாவே மனசு சரி இல்லை.. ரொம்ப நாளாச்சு வீட்ல இருக்கற அப்பா அம்மா தங்கச்சி எல்லாம் பார்த்து.. இங்கேயும் பெருசா வேலை ஒன்னும் இண்டரஸ்டிங் ஆ இல்லை.

கடலை போடவும் ஆள் இல்லை. சேர்ந்து கூத்தடிக்க பழைய நண்பர்கள் பட்டாளமும் இல்லை. shave பண்ணி மாசம் ஆகுது. ரூம்லயும் நிம்மதியா இருக்க முடியலை. அமைதியா ரூம்ல இருந்தாலும் ரூம்ல இருக்கற பெருசுங்க " zeenat aman " நடிச்ச நல்ல midnight masala songs போட்டுட்டு பாரு பாரு torture பன்னுதுக. யோவ்..கல்யாண வயசு ஆய்டுச்சு..இன்னும் கல்யாணம் ஆகல,இதுல நீங்க வேற ஏன்யா கடுபெத்தரீங்கான எங்க கேட்கறாங்க. ரொம்ப பேசினா சரி கல்யாணம் பண்ணிக்கோ நு தொந்தரவு பண்ணவேண்டீயது. அவன் அவனுக்கு இருக்கற நெருக்கடி அவனவனுக்கு தானே தெரியும்.

ஆக மொத்தம் வாழ்கையே வெறுத்து போன மாதிரி இங்க சுத்திகிட்டு இருக்கேன். இதை எல்லாம் பார்த்த நண்பன் ஒருத்தன் 'என்ன விஷயம் மச்சி.ஏன் இப்படி பிச்ச காரன் மாதிரி,வாழ்கையே வெறுத்து போன தேவதாஸ் மாதிரி சுத்திட்டு இருக்கேனு கேட்டான்' .என் நிலைமையை சொன்னேன்,ரொம்ப boreஆ இருக்கு மாமே. எதுவுமே பிடிக்கல,எதுலையுமே interest இல்லன்னு சொன்னேன். அதுக்கு நண்பன் உடனே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான். (அதான் ஓசி la நிறைய கிடைக்குமே!)


'ப்ரீ ஆ விடு மச்சி. பண்றதையே அதே routine ல பண்ணிட்டு இருந்தா இப்படி தான்டா. பேசாம உன்னோட அன்றாட நடவடிக்கைகளை மாத்தி பார். நேரம் வரைக்கும் தூங்கு. லேட்டா எழுந்துரு. workout எல்லாம் கொஞ்ச நாளைக்கு Hold பண்ணு. நல்லா சாப்டு. புது பாட்டெல்லாம் கேளு. பழைய படம் உனக்கு பிடிச்சது இருந்தா டவுன்லோட் பண்ணு. உனக்கு கம்போர்ட் எதேல்லம்னு பார்த்து அத செய். Happy இருக்க பார்னு சொன்னான்.


அவன் சொல்றது கூட நியாமா படுது எனக்கு. சரி எல்லாத்தையும் மாத்திதான் பார்ப்போமே. ஒரு change வந்தா நல்லது தானே? (அதானே..வேலை செய்யாம தூங்குனு அட்வைஸ் பண்ணா பின்ன சொகமா இருக்காதா என்ன? ). சரி எல்லாத்தையும் மாத்தித்தான் பார்ப்போமே. இதுமட்டும் இல்லாம மத்த எதாவது கூட ட்ரை பன்னுவேமொனு வெறித்தனமா யோசிச்சப்போ வந்த ஞானோதையம் தான் என்ன " விஜய் " ரசிகன் ஆக்கிடுச்சு.

என்னடா இவன் இப்படி சொல்றானே நு நீங்க யோசிக்கறது புரியுது. ஒரு உவமை ஒன்னு சொல்றேன் கேளுங்க. எல்லோருக்கும் நம்ம "SamAnderson " பத்தி தெரியும்னு நினைக்கிறன்( சொல்லி தெரியவேண்டிய'Figure' ஆ அவர்? .தெரியாதவங்க இந்த லிங்க் சொடுக்குங்க. 'http://en.wikipedia.org/wiki/Yaaruku_யாரோ'. யாருக்கு யாரோ படம் மூலமா இந்த உலகத்துக்கு தமிழ் cinema கொடுத்த முத்து அவர். சரி விஷயத்துக்கு வருவோம். நம்ம "SamAnderson " பத்தி நம்ம நண்பர் ஒருத்தர் ( அவரோட தீவிர விசிறி) தன்னுடைய சமுதாய வலயத்தில் (Social networking - Orkut )விசிறி மன்ற தலையங்கத்தில் சொன்னது .

" நான் வாழ பிடிக்காமல் தற்கொலை பண்ணிகொள்ளலாம் நு இருந்த பொது என்னோட நலவிரும்பி சொன்னதின் பலன் தங்களுடைய படம் "யாருக்கு யாரோ " பார்த்தேன். அப்போ தான் நான் முடிவு பண்ணேன். "ஒ.. நீ எல்லாம் உசுரோட இருக்கும் போது என்ன மைத்துக்கு நான் சாகனும்".

பார்த்தீங்கள்ள.. நம்ம ஆள் sam எவ்ளோ பெரிய inspirational ! so இவ்ளோ பெரிய விஷயங்கள் இருக்கறப்போ நான் இளைய தளபதி விசிறி ஆகறது சாதாரணம் தானே? இதெல்லாம் விட நான் இளைய தளபதி விசிறியாக மாறதுக்கு ஒரு " தீப்பொறியா "இருந்தது நம்ம 'வேலுஊஊஊஊஊஊ வேலாயுதம்'தாங்க. அதுவும் படம் ரிலீஸ் ஆனதும் நம்ம மதன் சார் movie talkies விமர்சனம் இன்னொரு மைல் கல் inspirational !.

இளைய தளபதியோட 'வேலுஊஊஊஊஊஊ வேலாயுதம்'பார்ததுகப்புறம் தான் தோணிச்சு ,இளைய தளபதியோட படம் எதாவது பார்கலனாலும் சரி, எதாவது ஒரு படத்த பார்த்த போதும். மத்ததுக்கும் இதுக்கும் கதாநாயகி அப்புறம் படத்தோட பேர் மட்டும் வித்யாசபடும். (யாருக்கு தெரியும்,அடுத்த வாட்டி விதியாசம அதையும் copy அடிக்கலாம். )

இது மாதிரி தன்னோட விசிறிகள சந்தோஷ படுத்தவே தன்ன அற்பனிதுக்கொண்ட தியாகிய மரியாதை செயனும்ல?


ஆகவே .. இனிமே நான் இளைய தளபதியின் தீவிர விசிறி.. நான் இருக்கும் போது அவர யாரவது ஓட்டினீங்க .. ஆமா சொல்லிபுட்டேன்