Friday, October 1, 2010

பல நூறு வருடங்கள் வாழ்ந்து விட்டேன் உன் நினைவுகளோடு...

உன்னை நேற்று பார்த்தது போல் உள்ளதடி..
ரசிக்க வைக்கும் குறும்புகளும்
வெகுளிதனமான சிரிப்புகளும்
புத்துணர்சியுட்டும் உன் புன்னகையும்
குறும்பு மின்னும் உன் குரலும்
உன் செல்ல அடிகலும்
மொக்கை கடிகலும்..

உன்னை மட்டுமே நினைக்க வைக்கும் பாடல்களும்
இதயம் வலிக்கும் சில சுகமன ராகங்களும்..
மனதை நெருடும் சில கவிதை வரிகளும்
கவிதையாய் உன் நினைவுகள்..
பசுமையாய் என் மனதில் என்றும்..
உன்னை நேற்று பார்த்தது போல் உள்ளதடி..

பல நூறு வருடங்கள் வாழ்ந்து விட்டேன் உன் நினைவுகளோடு...
என் கடிகாரம் மட்டுமே சொல்கின்றது ஆண்டுகள் சிலவே என்று..
திரும்பி பார்கும் போதுதான் உண்மை உறைக்கின்றது..
நீ என்றுமே என் கவிதை மட்டும் தானென்று..

என் மனதுக்கு தெரியவில்லை உன் நினைவுகளை விட..
என்னால் முடியவில்லை உண்மையை ஏற்க...என்ன செய்ய நான்..
நீ வருவாய் என காத்திருக்க நான் சுய நினைவில்லாமலும் இல்லை..
என் காலங்கள் என்றும் வெறுமையில் கழியுதடி..

பல நூறு வருடங்கள் வாழ்ந்து விட்டேன் உன் நினைவுகளோடு...
இன்னும் சில நூறாண்டுகள் வாழ்வேன் உன் நினைவுகளோடு...

4 comments:

  1. siva... yaarukaha indha kavidhai???

    ReplyDelete
  2. Bhuff...Ungala vitta vera yaarukaha feel panni ippadi ellam kavithaiya koraika poren..
    :)

    ReplyDelete
  3. Mama, Yaar kitte erundhu Sutte? Ada Pavi.....

    ReplyDelete
  4. Dei...ithu Sontha kathai soha kathai da...

    ReplyDelete