உன் ஞாபகங்களை தொலைக்க நான் வேலையில் என்னை தொலைத்தேனடி
புதியவர்கள் அறிமுகம் எனக்கு புது வாழ்க்கையை கொடுக்க வில்லையடி
புதியவர்கள் பழையவர்கள் ஆவது புதிதில்லையடி
ஆனால் நீ மட்டும் எனக்கு அப்படியே நிறைந்து இருப்பது தான் எனக்கு என்றும் புரியாத புதிரடி.
உன் ஞாபகங்களை தொலைக்க வேலையில் தொலைந்த நான்
என் வேளைதொலைந்ததும் உன் ஞாபகத்தில் தொலைகின்றேனே
இது கொடுமையடி
வாய் விட்டு அழ முடியவில்லை சின்ன குழந்தை போல
அன்னை மடியில் சாய்ந்து அழ அன்னையும் இல்லை அருகில்
கோவில் சென்று குறை பாட
அந்த ஒரு கோவிலும் இல்லை இவ்வூரில்
இது கொடுமையடி
அந்நிய நாட்டில் உள்ள ஆடவனுக்கு இது போன்ற நினைவுகள்
இது இன்னும் கொடுமையடி
மறக்க முயன்றும் மறவாத உன் ஞாபகங்கள்
என்னை இன்னும் கொல்லுதடி
குழந்தையாய் உன் முகம் பழிபோட என் மனம் தயங்குதடி
தறிகெட்டு அலையும் என் மனம் என்றுதான் ஓயுமடி
இது என் உயிர் ஓயும் வரை தொடருமடி
என்றும் உனக்கு புரியாத கவிதை என் தாய்மொழியில்
இது இன்னும் கொடுமையடி
நீ இல்லாத உன் நினைவுகள் மட்டும் எனக்கு
என்றும் நரகவேதனையடி
இது இன்னும் கொடுமையடி
போதும் இந்த கொடுமை என்று இப்பொழுது தோணுதடி
போதும் வாழ்ந்தது இந்த வாழ்கை என்ற என்னம் என்றும் தோணுதடி
இது நரகவேதனையடி