நீங்கள் எதற்காக இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளீர்கள்?
எத்தனையோ நாதாரிகளுக்கு CV அனுப்புனேன், எவனும் கூப்பிடல, நீ லூசு கூப்பிட்ட தோ
வந்தாச்சு
**************************************************************************************
எதற்க்காக நீ இந்தக் கம்பெனியில் வேலைக்கு சேரணும்?
எப்படியும் எவன் டவுசரயாவது உருவனும், நீ உன் டவுசரக் குடுத்தா உருவுவேன்.. இந்த
கம்பெனி தான் இந்த டவுசர் தான்னு சுயநலமா யோசிக்கிரதில்லப்பா…
**************************************************************************************
நான் எதற்கு உனக்கு வாய்ப்பு தரணும்?
வரும் போதே பாத்தேன்.. நெறைய ஜிகுடிங்களா இருந்துச்சு, அதுலயம் ஒரு சிவப்பு கலர்
சுடிதாரு என்னைப் பாத்து சிரிச்சது... எப்டியும் எவனுக்காவது குடுக்க போற, அத எனக்கே
குடுத்துறேன் உனக்கு ஏதாவது அமௌன்ட் வேணும்னா கூச்சப்படாம கேளு... நான் தர்றேன்.
**************************************************************************************
சரி, நான் வேலை குடுத்தேன்னு வை.. அந்த நிமிஷம் நீ என்ன பண்ணுவ?
உனக்கு சனியன் புடிச்சதுன்னு நெனைப்பேன், அது அப்ப உள்ள மூடப் பொறுத்து நைனா...
டக்குனு எந்திரிச்சு ஆடுவேன், சொல்ல முடியாது.. ஆனா நீ வேலை குடுத்தா.. நான் செத்தேன்
ஓசிக்குடி குடிக்க ஒரு கூட்டமே வெளிய நிக்குது
**************************************************************************************
உங்களுடைய மிகப்பெரிய பலமாக எதை நினைக்கிறீர்கள்?
(அத சொன்னா ரொம்ப அசிங்கமாயிரும்.. வேண்டாம்)
எவன் சம்பளம் கூட குடுக்கானோ அவன் பின்னாடியே போயிடுவேன், அத நல்லா கம்பெனியா சொத்தையானுலாம் பாக்க மாட்டேன்.
**************************************************************************************
உங்களுடைய பலகீனம்?
ஒன்னும் இல்ல சார்.. வேலை செய்யும் போது தூங்கிருவேன்.. என்ன எவனாவது திட்டுன
கேரளாவுக்கு போய் முட்ட, தகுடு எல்லாம் குடுத்து செய்வினை வச்சிருவேன் அவ்ளோ தான்
வேற பெருசா ஒன்னும் பண்ண மாட்டேன்
**************************************************************************************
நீங்க பண்ணதிலே மிகப் பெரிய தப்பு எது? எவ்வாறு அதை சரி செய்தீர்கள் / செய்வீர்கள்?
பண்ணதிலே மிகப் பெரிய தப்புன்னா, போன கம்பெனில சேர்ந்தது.. கம்பெனியா சார் அது?
சனியன் எப்பபாரு வேலை வேலைன்னுட்டு, நிம்மதியா you tube பாக்க முடியாது.. Orkut,
Facebook பிளாக் பண்ணிட்டனுங்க.. சாட்டிங் பண்ண முடியாது.. அதுவும் இல்லாம எல்லாம்
மொக்க பிகரு, குமட்டிக்கிட்டு வரும் சார்.. ஒன்னு ரெண்டு இருந்தாலும் கல்யாணம் ஆனத
இருக்கும், அடுத்தவன் பாவம் நமக்கு எதுக்கு சார்..
**************************************************************************************
உங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சாவல் எது? எப்படி அதை எதிர்கொண்டீர்கள்?
மிகப்பெரிய சவால்னா மூதேவிங்க எல்லா interview ளையும் "எதுக்கு வேற வேலை
தேட்ரன்னு ஒரே கேள்விய திருப்பி திருப்பி கேப்பானுங்க" அதான் சார்..
விஜய் படம் பாத்த மாதிரி முழிப்பேன்.. வேர்த்துக் கொட்டும், அதுக்கு பதில் சொல்ல
முன்னாடி பெரும்பாடாப் போயிரும் சார்.. என் டவுசர் கிழிஞ்சிரும்.. பே பேன்னு ஏதேதோ
உளறிக்கொட்டி சமாளிச்சிருவேன்
**************************************************************************************
எதற்காக உங்கள் பழைய கம்பெனில இருந்து வெளி வரணும்னு நினைக்கிறீர்கள்?
நீ என்ன... உன் பழைய கம்பெனிய விட்டு வந்தியோ அதுக்குத்தான்.. போதுமா
அதுவும் இல்லாம போதும் சார் ஒருத்தனையே எவ்ளோ நாள் தான் டார்ச்சர் பண்றது..
எனக்கே போர் அடிக்குது.
**************************************************************************************
இந்த கம்பெனில நீ என்ன மாதிரி வேலை எதிர்பாக்குற?
வேலையே இருக்கக் கூடாது.. மாச மாசம் கரெக்டா சம்பளம் குடுக்கணும்.. மாச மாசம்
Increment குடுக்கணும்.. நெறைய பிகருங்க இருக்கணும் அது போதும் சார் எனக்கு….
**************************************************************************************
உங்களுடைய லட்சியம் என்ன? அதற்கு உங்களை நீங்கள் எவ்வாறு தயார் செய்துள்ளீர்கள்?
நெறையா சம்பாதிக்கணும், அதுக்கு வருஷா வருஷம் குரங்கு மாதிரி கம்பெனி கம்பெனியா
தாவனும்... நான் ஒருத்தன் நல்லா இருக்கணும்னா, எத்தன கம்பெனி நாசமா போனாலும், எது
பண்ணாலும் தப்பில்ல
**************************************************************************************
என்ன சம்பளம் எதிர்பார்க்குறீங்க?
இதக்கேப்பன்னு தெரியும்.. அதே சம்பளத்துக்கு எவன் வருவான்.. ஒரு 30 % கூட்டிக் குடு
(தப்ப நெனைக்காதீங்க சார்)...
எனக்கு தெரியும் எப்டியும் நீ பர்மா பஜார்ல ரேட் பேசுற மாதிரி குறைச்சு பேசுவேன்னு..
அதுக்குத்தான் என் ஒரிஜினல் சம்பளத்த விட 30% ஏத்தியே உன்கிட்ட சொன்னேன்
**************************************************************************************
Thanks to Raghu Kathir... :)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment